நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி on Tuesday, July 29th, 2008
1463. ‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
புஹாரி : 246 இப்னு உமர் (ரலி).
1464. நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி ‘யமாமா’வாகவோ ‘ஹஜரா’கவோ தான் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால், அது யஸ்ரிப் -மதீனாவாகிவிட்டது. மேலும், இந்த என்னுடைய கனவில் நான் (என்னுடைய) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போதுமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டி) அழகாகியது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளைமாடுகளை பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்ததாகும்.எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3622 அபூ மூஸா(ரலி).
1465. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) ‘முஸைலிமா’ எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், ‘முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்” என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்சமட்டைத் துண்டு ஒன்று இருந்தது.
முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, ‘இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச்செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்’என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன்” என்று (முஸைலிமாவிடம்) சொன்னார்கள்
புஹாரி :4373 இப்னுஅப்பாஸ் (ரலி).
1466. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் ‘எனக்குப் பின் வெளிப்படவிருக்கிற மகா பொய்யர்கள் இருவர்’ என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ மற்றொருவன் முஸைலிமா என்று கூறினார்கள்.
புஹாரி :4374 அபூஹூரைரா (ரலி).
1467. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்” என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்” என்றனர்.
அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், ‘இவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள்,’செல்லுங்கள், செல்லுங்கள்” என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்து வைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், ‘இவ்விருவரும் யார்? என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்” என்று கூறினார்கள்.
நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்” என்று கூறினர். அப்படியே நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், ‘இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், ‘அதில் ஏறுங்கள்” என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காண்கிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்” என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசிங்கம் நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பி வந்தனர்.அவ்விருவரும் என்னிடம், ‘இது (-இந்த நகரம்) தான் ‘அத்ன்’ எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்” என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், ‘இது உங்கள் இருப்பிடம்” என்றனர். நான் அவர்களிடம், ‘உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்” என்றேன். அவ்விருவரும், ‘இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்)அதில் நுழையத்தான் போகிறீர்கள்” என்றனர். நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக்கண்டு உள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம்,’(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொயயைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)” என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்” என்று பதிலளித்தார்கள்.(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறு பாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்து விட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (என்று கூறினர்).
புஹாரி : 7047 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி).
பிரிவு: அல்லுஃலுவு வல்மர்ஜான் |
Friday, March 20, 2009
எனக்கு இப்போதும் மணக்கிறது அந்த இரத்த வாடை.

pradeepan, paris
கட்டுரைகள்/ஆய்வுகள்
இந்த மே மாதம் 4ம் திகதி இரவு நான் ஒரு கனவு கண்டேன். கனவு கண்டு விழித்தபோது நான் ஒரு பதட்டத்தில் இருப்பதைப் போலவும் என் அன்புக்குரிய ஏதோ ஒன்றை இழந்தது போலவும் எனக்குத் தோன்றுகின்றது. எனக்கு கனவுகள் அவ்வப்போதுதான் வரும். வரும் கனவுகள் எப்போதுமே என்னை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தும். கனவுகள் ஆழ்மன சிந்தனைகளின் குறியிடுகளுடனான காட்சி வடிவம் என நான் எப்போதும் நம்புவதால் என் கனவு தோன்றுவதற்கான என் ஆழ்மனக் காரணிகளை நான் தேடுவது வழக்கம். பெரும்பாலும் என் கனவுகளுக்கும் என் ஆழ்மனதிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என நான் அறிவேன். எனது கனவில் வந்த காட்சி இது.
ஒரு அடர்ந்த காடு. அன்று பௌர்ணமி நாளென நினைக்கிறேன். நீலநிற இருள் அவ்வடர்ந்த கானகமெங்கும் பரவியிருப்பதை நான் காண்கிறேன். அங்கே ஒரு வெள்ளை நிற ஆடு நிற்கிறது. அதை நான் இப்போது பார்க்கிறேன். நிலவின் வெளிச்சத்தில் அந்த வெண்மையான ஆடு ஒரு தேவதையைப்போல ஜொலிக்கிறது. நான் அந்த ஆட்டின் அழகில் மயங்கித்தான் போகிறேன். அந்த ஆட்டை உற்று நோக்குகிறேன். அதன் முலைக்காம்பில் மூன்றோ அல்லது நான்கோ குட்டிகள் பால் குடித்தபடி இருக்கின்றன. நான் மெதுவாக அந்தத் தாய் ஆட்டை நோக்கி நடந்து செல்கிறேன். எத்தனை அழகு! என் உடல் புல்லரித்துக் கொள்கிறது. நான் ஆட்டை நோக்கி நடக்கும்போது ஏதோ ஒரு சிறு அசைவை அவதானிக்கிறேன். ஒரு மூலையில் இருந்து சத்தம் எழுவதை நான் அவதானிக்கிறேன். உற்று நோக்குகிறேன்.
ஐயோ! அங்கே ஒரு புலி மெதுமெதுவாக பதுங்கிப் பதுங்கி வருகிறது. முன்னோக்கி நடந்த என் காலகள் தடுமாறுவதை நான் அவதானிக்கிறேன். புலி வருவதை அறியாத அந்த ஆட்டுக் குட்டிகள் பசியாறிக் கொண்டிருக்கின்றன. புலி மெதுவாக அண்மித்துவிட அசுர வேகத்தில் அந்தத் தாயாட்டின் குரல்வளையை புலி கவ்வி விடுகிறது. அந்த அழகான கரும் நீலநிற வெளிச்சத்தில் தாய் ஆட்டின் கழுத்தில் குருதி வழிகிறது. புலியின் குணாம்சம் புரியாமலும் தாய் ஆட்டிற்கு நடப்பது புரியாமலும் குட்டிகள் இருக்க புலி குட்டிகளையும் கடித்துக் குதறுகிறது. ஆட்டினதும் அதன் குட்டிகளினதும் அலறல் அந்த அமைதியான கானகமெங்கும் பரவுகிறது. நான் நின்ற இடத்திலேயே விறைத்துப் போய் நிற்கிறேன். என் சக்திக்குட்பட்டு ஆடுகளைக் காப்பாற்ற என்னால் இயலாது. என் இயலாமை என் உணர்வுகளை சிதைக்கிறது. ஏதோ எங்கோ ஒரு சத்தம்.
மீண்டும் உற்றுப் பாரக்கிறேன். கானகத்தின் ஒவ்வொரு சந்துகளிலும் இரத்தப் பசியுடன் ஓநாய்கள் பல நிற்பதைக் காண்கிறேன். அவை ஒவ்வொன்றின் கண்களிலும் ஓநாய்க்கே உரிய கபடமான அமைதியான முகத்தில் ஒரு கொடூரமான இரத்த வெறி. ஆட்டின் அலறல் அடங்கி விட்டது. புலி மாமிசத்தைப் புசித்தபடி இருக்கிறது. அதன் வாயெங்கும் இரத்தம். இரத்த வாடையும் குட்டி ஆடுகளின் எலும்புகள் நொருங்கும் சத்தமும் அக் கானகம் எங்கும் பரவுகிறது. நான் இரத்த வாடையை முகர்கிறேன். ஆமாம் எனக்கு அந்த வாசனை தெரிகிறது. இரண்டு அடிகளை நான் பின் நோக்கி வைக்கிறேன். என் கால்கள் ஏதோ மாற்றத்தை உணர்கின்றன. திடுக்pட்டவனாய்த் திரும்புகிறேன். ஒரு ஓநாய் என் அருகில். நான் அத்தோடு விழித்துக் கொண்டேன். எனக்கு இப்போதும் மணக்கிறது அந்த இரத்த வாடை.
நான் யோசிக்கிறேன். எனது கனவுக்கான மூல காரணம் என்ன? கண்டுகொள்ள இயலவில்லை. நான் எதையாவது கண்டு பயந்தேனா, இல்லையே! இன்றைய பொழுது நான் என்ன செய்தேன். நித்திரை விடடெழுந்ததும் இலங்கையில் இருந்து அம்மா அனுப்பிய கடிதமும் புகைப்படங்களும் கிடைத்தன. சார்சலில் நடந்த கூட்டத்துக்குப் போய் வந்தேன். அதை TULF, PLOTE, EPRLF-P இணைந்த ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு ‘இலங்கை இனப்பிரச்சினையில் எமது ஐக்கியம்’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்தார்கள். கூட்டம் முடிந்து பின்னேரம் தான் வீடு வந்தேன்.
இரவு இணையத் தளங்களைப் பாரத்தேன். கிழக்கிலங்கைத் தேர்தல் நெருங்குவதால் இணையத் தளங்கள் எங்கும் தேர்தல் வாடை. தேசம் நெற்றில் இலங்கை ஜனநாயக ஒன்றியம் (SLDF), (TPF), (SLIF - UK), தலித் மேம்பாட்டு முன்னணி (SDOSLD) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையைப் பார்த்தேன். தலித் மேம்பாட்டு முன்னணியின் தூ இணையத் தளத்தில் கிழக்கிலங்கை முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைளைப் பார்த்தன். இமெயில் மூலம் வந்திருந்த பிள்ளையானின் ஊடகவியலாளர் மாநாட்டு வீடியோவையும் பார்த்தேன். இரவு ஆட்டுக்கறியும் சோறும் சாப்பிட்டுவிட்டு ‘வெள்ளித்திரை’ என்கிற படமும் பார்த்துவிட்டுப் படுத்தேன்.
சீ! இவற்றுக்கும் என் கனவுக்கும் என்ன சம்பந்தம்?

Labels:
dreams,
dreams reasurch.,
dreamsreason,
thenmozidas,
தென்மொழ்தாஸ்
கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் 'The Dreaming Universe '
அரவிந்தன் நீலகண்டன்
பிரெட் ஆலன் வூல்ப் ஒரு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் உலகம் சுற்றும் விரிவுரையாளர். க்வாண்டம் இயற்பியலுக்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பு குறித்து விவாதத்துக்குள்ளாகும் பல கருதுகோள்களை அவர் முன்வைத்துள்ளார். அவரது முக்கியமான பிறநூல்கள் 'Taking the Quantum Leap ', 'The Eagle 's Quest ' மற்றும் 'Parallel Universes '. 'கனவு காணும் பிரபஞ்சம் ' எனும் இந்நூலில் உளவியல், உயிரியியல் மற்றும் க்வாண்டம் இயற்பியலின் துணையுடன் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பிரபஞ்சவியல் முதல் இன்றைய நவீன கனவு ஆராய்ச்சிசாலைகள் வரை என பற்பல கண்டடைவு முறைகளில் கிட்டும் சித்திரங்களை தொடர்புபடுத்தும் ஓர் பிரயாணத்தில் அவர் வாசகரை அழைத்துச் செல்கிறார். கனவு காண்பதென்பது செமிக்காத இரவுணவின் விளைவா ? அல்லது பிரபஞ்ச இருப்பிலும் இயங்கலிலும் இன்றியமையாது இணைந்ததோர் இயற்கையா ? அதற்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பென்ன ? கனவின் எல்லைக்கோடுகள் எவை ? கனவுகள் எங்கே தொடங்கி எங்கேமுடிகின்றன ? பல பண்பாட்டுப் பார்வைகளில் அவற்றின் பிரபஞ்சக்கதையாடலில் கனவுகளின் இடம் என்ன ? தன்னுணர்வு குறித்த நம் 'அறிவியல் ' அறிதலில் கனவின் இயற்கை குறித்த நம் அறிவு எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது ? என பல கேள்விகளுக்கான விடைகளினை தேடும் முயற்சியாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் பல கருத்துக்கள் துணிகரமானவை. எனினும் அவற்றை நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்க முயலும் எந்த முயற்சியும் நமக்கு மேலும் பல உண்மைகளை தரக்கூடும்.
பெஞ்சமின் லிபெட் எனும் நரம்பியல் ஆய்வாளர் (சான்பிரான்ஸிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம்) கால ஓட்டத்தின் எந்த புள்ளிகளில் நமது தன்னுணர்வு வெளியுலகிலிருந்து நாம் பெறும் உணர்வு-உள்ளீடுகளுடன் தொடர்பு கொள்ளுகிறது என்பது குறித்து சில முக்கியமான கண்டுபிடிப்புகளை 1970களில் முன்வைத்தார். இக்கண்டுபிடிப்புகளின் சாராம்சம் மூளையிலும் அதன் நரம்புப்பின்னல் மண்டலத்திலும் ஒருவித 'காலத்தில் பின் சென்றறிதல் ' எனும் நிகழ்வு நடக்கிறது. அதுவே நம் உடனடியாக விஷயங்களை உள்வாங்கி எதிர்வினையாற்றும் ' திறனுக்கு காரணம் என்பதாகும். இந்த வியக்கதகுத்தன்மை நம் மூளையில் எவ்வாறு ஏற்படுகிறது ? இதன் இயக்க கோட்பாடு என்ன என்பது ஆராய்ச்சிக்குரிய மர்மமாக உள்ளது. வூல்ப் க்வாண்டம் இயற்பியலின் தன்மைகளை இவ்வியக்க நிகழ்வில் காண்கிறார் (பக்.89-102). இது குறித்த வூல்பின் ஆய்வு 'Journal of Theoretical Biology ' யில் வெளியானது. இந்த ஆய்வுதாள் அதாவது லிபெட்டின் பரிசோதனை முடிவுகளை க்வாண்டம் இயற்பியல் அடிப்படையில் வூல்ப் விளக்க முற்படுவது குறித்து லிபெட் சில கேள்விகளை எழுப்புகிறார். அக்கேள்வி களுக்கான விளக்கங்களுடன் லிபெட்டின் ஆய்விலிருந்து நாம் அறிபவற்றிலிருந்து கனவுகளின் இயற்கை குறித்தும் வூல்ப் சில ஊகங்களை செய்கிறார். நம் அனைத்து செயல்களுக்குமான வேர் நனவிலியிலிருந்து பெறப்படுகிறதென்பதை லிபெட்டும் ஒத்துக்கொள்கிறார். புற உலகு நம் மூளைக்கு அளிக்கும் உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெறுவதற்கு முன்பாகவே எதிர்வினை (நனவிலியிலிருந்து ?) உருவாகிறது ஆனால் அதன் முழுமையான செயல்பாட்டு வெளிப்பாடு உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெற்றபின் அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. வூல்ப் இந்த இடத்தில்தான் 'புற ' உலகுக்கும் கனவுலகுக்குமான கோடும் கலவியும் ஏற்படுவதற்கான தோற்றப் புள்ளிகள் இருப்பதாக கருதுகிறார். (பக். 100)

பின்னர் கனவு குறித்த பல அறிவியலாளர்களின் ஆய்வுகள் முன்யூகங்கள் ஆகியவற்றை தொகுத்தளிக்கிறார் வூல்ப். ஜோனதன் வின்சனின் விலங்குகளின் கனவு குறித்த பரிசோதனைகளில் தூக்கத்தில் ஏற்படும் கண் வேக அசைவு (REM-Rapid Eye Movement) நிலையினை அடிப்படையாக கொண்டு நனவிலி செயலியக்கம் விலங்கின உலகில் பரவலாக காணப்படுவதாகவும் விலங்கின ஜீவித்தலுக்கு இந்த நனவிலி இயக்கம் அவசியமானதெனவும் அவர் முடிவுக்கு வருகிறார். நனவிலியும் சரி தன்னுணர்வும் சரி பெளதீக இயற்கையில் இருப்புடையவை என்றும் தொடர்ச்சியுடையவை என்றும் டெஸ்கார்ட்டாய மன-உடல் பகுப்பு தவறென்றும் அவர் கூறினார். இங்கிருந்து பயணத்தை துவக்குகிறார் வூல்ப். கிப்போகாம்பஸ், அமைக்தாலா ஆகிய மூளை அமைப்புகளின் பங்கு விவரிக்கப்படுகிறது. ஒரு சோகமான பாடல் நமக்கு ஒலி உள்வாங்குதல் எனும் நிலைக்கு அப்பால், அந்த ஒலிக் கூட்டம் சோக இசையாக உணர்ச்சியேற்றப்பட்டு மாற்றப்படுவது, சோகமாக்கப்படுவது அமைக்தாலாவால் இருக்க கூடும். அமைக்தாலா உணர்ச்சிகளின் உறைவிடமாக நரம்பியல் ஆராய்ச்சியாளர்களால் அறியப்படுகிறது. அமைக்தாலா, கிப்போகாம்பஸ் இவை எல்லாம் நம் பரிணாமத்தில் புராதன காலத்தில் எழுந்தவையாகும். இன்று பல கனவு ஆய்வகங்களில் நமக்கு கிடைக்கும் சித்திரம் அவை பொருளுடையவை ஆனால் ப்ராயிடும் உங்கும் கூறிய பொருளில் அல்ல என காட்டுவதாக வின்ஸன் அவரது பரிசோதனைகள் அடிப்படையில் அமைக்கும் கோட்பாடு அமைகிறது என்கிறார் வூல்ஃப் (109). நினைவுகளை உருவாக்கும் இயக்கமாக LTP (Long Term Potentiation) கண்டறியப்பட்டுள்ளது. இது ஹிப்போகாம்பஸுடனும் மூளையின் தீட்டா ரித இயக்கத்துடனும் தொடர்புடையதாகும். விலங்குகளில் அவை அவற்றின் வாழ்க்கையில் உயிர்வாழ இன்றியமையா அன்றாட தேவையான இயக்கங்களில் அவ்விலங்குகள் ஈடுபடுகையில் தீட்டா ரிதம் உருவாகிறது. உதாரணமாக எலிக்கு - அது இடங்களுக்குள் நுழைகையில் தீட்டா ரிதம் உருவாகிறது; பூனைக்கோ வேட்டை இயக்கத்தில் தீட்டா ரிதம் உருவாகிறது. வின்சன் தீட்டா ரிதம் உருவாகும் செல்லமைப்புகள் ஹிப்போகாம்பஸில் இருப்பதை கண்டுபிடித்தார். இவை அழிக்கப்பட்ட எலிகள் வெளி குறித்த நினைவை இழந்துவிடுகின்றன. விழிப்புநிலையில் LTP நிகழ்வுகளில் ஏற்படும் தீட்டா ரிதங்கள் தூக்கத்தின் REM நிலையிலும் ஏற்படுவதை வின்ஸன் அறிந்தார் பிரைமேட்களில் தீட்டா ரிதம் காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டுகிறார் வின்ஸன். ஆனால் அதற்கு இணையான மற்றோர் நரம்பியக்கம் இருக்ககூடும்.உயிர்வாழ்வதற்கான இயக்கமுறைகளில் முக்கியமான தகவமைப்புகளில் ஒன்றே கனவுகாண்தல். மனிதர்களை பொறுத்தவரையில் நனவிலியிலிருந்து தகவல்களை பெறும் உயிரியக்கமாக கனவினை காணலாம் என்கிறார் வின்ஸன். (பக். 112)

அடுத்ததாக புகழ்பெற்ற கிரிக் மிட்சிஸன் ஆய்வுகள் ஆராயப்படுகின்றன. நம் கனவுகள் நாம் சிலவற்றை மறப்பதற்காக ஏற்பட்ட உயிரியக்கமாக இருக்க கூடும். மேலும் கற்றவை களைதல் (unlearning) எனும் பண்பு மாறும் சூழலில் உயிர்வாழ மிகவும் அவசியமானதாக இருக்கலாம். அதற்கான ஒரு இயக்கமாக கனவு விலங்கினங்களிலும் மானுடர்களிலும் ஏற்பட்டிருக்கலாம். இதுவே கிரிக்-மிட்சிஸன் ஆய்வு முடிவுகளின் சாராம்சம். கணினிகளின் நியூரல் நெட்வொர்க்களிலிருந்து பெறும் ஆராய்ச்சி தகவல்களிலிருந்து இத்தகைய கழிவு நினைவுகள் மற்றும் கற்றவையகற்றல் ஆகியன குறித்து சில புதுவித பார்வைகள் பெறப் படுகின்றன (பக்115-123). சில வியக்கத்தகு விலங்குலக விந்தைகளும் விவாதிக்கப் படுகின்றன.உதாரணமாக டால்பின்களில் REM இயக்கம் காணப் படுவதில்லையாம். ஆனால் அவற்றின் மூளைகள் மிகப்பெரியவை. ஒருவேளை REM இல்லாத நிலையில் கழிவு நினைவுகள் மற்றும் கற்றவையகற்றலுக்கு பெரிய அளவில் நியூரானிய கட்டமைப்புக்கள் தேவைப்படலாம் என்கிறார் வூல்ப்.
அடுத்ததாக ஆலன் ஹாப்சனின் ஆராய்ச்சி முடிவுகளும் அவர் முன்வைக்கும் முடிவுகளும் வூல்பினால் விவரிக்கவும் விவாதிக்கவும் படுகின்றன. ஹாப்சன் கனவின் ஐந்து தன்மைகளை குறிப்பிடுகிறார்,
1. தீவிர உணர்ச்சிகள்
2. பகுத்தறிவுக்கு, நம் காலவெளி குறித்த சாமன்ய தன்மைக்கு, நாமறிந்தவர்களின் இயல்புக்கு - புறம்பானதாக, நம் நனவுலகின் விதிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் அமைவது.
3. ஏற்கனவே நாம் அனுபவித்த உணர்ச்சிகளை மீளனுபவித்தல்
4.இவையனைத்தையும் எவ்வித கேள்வியுமில்லாமல் ஏதோ ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளுதல்
5.கனவு உடனடியாக பதிவு செய்யாத பட்சத்தில், கனவின் உட்கிடப்பினை நினைவு படுத்துவதில் நாம் பொதுவாக சிரமம் கொள்ள வேண்டியிருப்பது.
ஹாப்சன் குறியீட்டு விளக்கங்கள் (ப்ராயிட்), முன்னறிவிப்பு விளக்கங்கள்(prophetic) ஆகியவற்றை நிராகரிக்கிறார். 'பலவிதங்களில் உளநோய் மாதிரியாக கனவு அமைகிறது. ஆனால் கனவு ஒரு உளநோய் அல்ல. கனவு காண்பவர் உளநோயாளி அல்ல. ஆனால் கனவு உளநோய் என்றால் என்ன என்று உணர்த்துகிறது ' (பக்.128) என்பது ஹாப்சனின் நிலைபாடு. நமது மூளையின் போண்டினே செல்களை கனவின் நரம்பியல் இருப்பிடமாக ஹாப்சன் கண்டறிகிறார். இதில் ஏற்படும் கோலிங்கரிக் தாண்டல் எனும் இயக்கம் வூல்ப்பால் விளக்கமாக விவரிக்கப்படுகிறது.நமது நரம்பு மண்டலத்தில் அமினெர்ஜிக் மற்றும் கோலிங்கரிக் என இரு அமைப்புகள் காணப்படுகின்றனவாம். முன்னதன் செயலியக்க நிலை நம் விழிப்பு. அச்சமயம் கோலிங்கரிக் அமைப்பு செயல்படுவதில்லை. அமினெர்ஜிக் அமைப்பு ஓய்வடைகையில் நாம் துயில்கிறோம். அப்போது கோலிங்கரிக் அமைப்பு செயல்பட ஆரம்பிக்கிறது. இனி REM நிலைக்கு வருகையில் மூளையில் ஏற்கனவே அமினெர்ஜிக் அமைப்பு செயலற்று உள்ளது அதேசமயம் போன்டோ-ஜெனிகுலோ-ஆசிபிட்டல் மின்னதிர்வுகள் மூளையில் அலை மோதுகின்றன. நம் நனவுலக இயற்கையிலிருந்து வேறுபடும் கனவின் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கு இவை காரணமாக இருக்கலாமா ? ஹாப்சன் கனவுகள் இயக்கத்துடன் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். கருவிலிருக்கும் குழந்தைகளின் கண்ணின் வேக அசைவு குறித்த ஆராய்ச்சியுடன் இப்பகுதியை முடிக்கிறார் வூல்ப். இனி நாம் இந்த கனவு பிரயாணத்தில் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித சடங்குகள் மற்றும் புராணங்களின் உலகுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம்.
வூல்ப் பழங்குடியினருடன் இருந்து கிரகித்த பல விஷயங்கள் குறிப்பாக பிரபஞ்ச தோற்றம் மற்றும் மானுட இனத்தின் தோற்றம் ஆகியவை குறித்த இம்மக்களின் புனித கதைகளில் கனவின் மையப்பங்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடும் அறிவியலின் (Hard science) கனவு ஆராய்ச்சி ஊகங்களிலிருந்தும் முடிவுகளிலிருந்தும், பழங்குடியினரின் புனிதக்கதையாடல்களில் கனவுகளின் மையத்தன்மைக்கு நாம் அழைத்து வரப்படுகையில் ஒருவித தாவல் நம் மனதில் ஏற்படுகிறது. அத்தாவலில் சில சொல்ல இயலாத உச்சங்களை நம்மால் உணர முடிகிறது. உதாரணமாக இந்த மேற்கோளை படித்துப்பாருங்கள், 'ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவிலி ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த சிலர் இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். '
கனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ஃப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் 'அல்கெரிங்கா ' எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)
ஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் 'அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை '. ஆனால், வூல்ஃப் வினவுகிறார், 'எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும் ? இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை '(பக் 149). வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது. நம்முடைய புராணம் எனும் பதமும் புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்). வூல்ப் தான் ஆதிவாசிகளுடன் (பிந்துபி) வாழ்ந்து பழகிய அனுபவங்களூடே அவர்களது வாழ்க்கைக்கும் கனவுகளுக்கு அவ்வாழ்க்கையிலிருக்கும் முக்கிய இடத்துக்கும், நனவுலகும் கனவுலகும் ஒன்றுடனொன்று மேலோடும் தருணங்களையும் விவரிக்கிறார். (பக் 140-156) ஒரு பெருங்கனவின் பகுதிகளாக நம்மை காணும் நவீன அறிவியல் கதையாடலின் போக்கும் ஆதிவாசிகளின் புனித கதையாடலின் போக்கும் குவியும் ஓரிடம் - நாம் இப்பெரும் கனவின் பாகமெனில் இக்கனவின் நோக்கமென்ன ? ஆதிவாசிகளை பொறுத்தவரையில் ஓர் கனவின் அங்கமெனும் உணர்வில் உறவுகளில் அன்பினை வளர்த்தல்தான் இப்பெரு பிரபஞ்ச கனவில் உள்ளோடும் பொருள்.
கருவிலிருக்கும் சிசுவின் வளர்ச்சியில் கனவின் பங்கு முக்கியமானதென அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கனவுகளின் அதீத உணர்ச்சித்தன்மை 'கனவு மர்மத்தில் ' முக்கியமான ஒரு தடயமாக இருக்கலாம். பொதுவாக அதீத உணர்ச்சிக்கு பரிணாம செயல்பாடு இருக்கும். எனவே கனவுகள் பரிணாமத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம். பிரபஞ்ச கனவிலும் அதீத உணர்ச்சிகள் செயல்படுகின்றனவா ? எனும் கேள்வியை வூல்ப் அடுத்து எழுப்புகிறார். (பக்.159) கனவின் மர்மம் குறித்த பல முடிச்சுகளை க்வாண்டம் இயற்பியல் முடிச்சவிழ்க்கும் என வூல்ப் நம்புகிறார். (இங்கே ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும். பல உயிரியலாளர்கள் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூசன் பிளாக்மோர் போன்ற டார்வினிய உளவியலாளர்கள் இத்தகைய க்வாண்டம் இயற்பியலாளர்களின் முயற்சிகளை சந்தேக கண்ணுடனேயே பார்க்கிறார்கள். தேவையில்லாமல் ஒரு க்வாண்டம் மர்மத்தை இங்கே இயற்பியலாளர்கள் உருவாக்குவதாக குற்றச்சாட்டு. இந்த சர்ச்சை குறித்து விளக்கமாக அறிந்து ஈடுபடுவது நம் ஆய்வாளர்களை அறிவியலின் அறிதல் விளிம்பிலிருந்து அதை முன்னகர்த்த உதவும்.) அடுத்ததாக மன அமைப்பின் ப்ராயிடிய பாகங்களில் க்வாண்டம் தன்மையினை காண்கிறார் வூல்ப். அவை அ-தர்க்க அமைப்புகள் (alogical structures-க்வாண்டம் இயற்பியலில் இத்தகைய அ-தர்க்க அமைப்பாக ஹில்பர்ட் வெளி அறியப்படுகிறது) என்கிறார். உதாரணமாக ப்ராயிடின் 'id ' குறித்த விளக்கம், ' தர்க்க விதிகளுக்கு 'இத் ' -க்கு பொருந்தாது....மாறாக உணர்ச்சி துடிப்புகள் ஒன்றை ஒன்று அழித்து விடாமல், ஒன்றினை ஒன்று குறைத்து விடாமல் ஒன்றினருகே ஒன்றாக வாசம் செய்கின்றன. ' க்வாண்டம் இயற்பியலின் ஹில்பர்ட் வெளி போன்றே ப்ராயிடிய 'இத் ' -தும் காலம் துலங்கும் ஓரு வெளியல்ல. (பக்.169) பெரும் பிரபஞ்ச கனவில் 'நான் ' தொடங்குவது எங்கிருந்து ? முடிவது எவ்விடம் ? 'ஒருங்கிணைந்த காரண-காரியத் தொடர்பற்ற உறவுகள், க்வாண்டம் இயற்பியல் நிகழ்ச்சிகள் இவையே தன்னுணர்வினை உருவாக்குகிறது எனில் இத்தன்னுணர்வு என்னுள் எங்கோ ஓரிடத்தில் இல்லை, இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது...இவ்விதத்தில் முரண்நிலையாக 'நான் ' இல்லவே இல்லை...அத்துடன் நானே சர்வமும்....நானே அனைத்து பிரபஞ்சமும், என உணரும் அளவு 'நான் ' பரிணமித்தால். ' (பக்.174)
அடுத்ததாக கனவு டெலிபதி குறித்த சில பரிசோதனைகளும் அதன் முடிவு குறித்து போமின் இயற்பியல் சித்தாந்த துணையுடன் சில விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பதிலேயே இந்த இடம்தான் நூலின் மிக பலவீனமான பகுதி என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.(பக்175-189). பிரெடரிக் வான் ஈடென் முதன்முதலாக லூசிட் கனவுகள் எனும் பதத்தை உருவாக்கினார். ஏறக்குறைய விழிப்பு நிலை கனவுகள்,கனவுகள் போலவே நம் அறிதலில் மர்மமாக இருந்துள்ளன. இக்கனவுகளில் பெரும்பாலும் நாம் கனவு காண்பதை குறித்த உணர்வுடனேயே இக்கனவில் நாம் பங்கேற்கிறோம் மேலும் கனவின் போக்கையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஹோலோகிராம் செயலியக்க அடிப்படையில் இவற்றை விளக்க வூல்ப் முற்படுகிறார் (பக். 201)
அடுத்ததாக கனவுடல் குறித்து. அர்னால்ட் மிண்டெல் உடல் உபாதைகளின் சைகைகளாக கனவுகளை அறிந்ததிலிருந்து கனவுடல் எனும் ஒரு கோட்பாட்டினை அவர் உருவாக்கினார். க்வாண்டம் சாத்திய புலமாக கனவுடலையும் ஒரு குறிப்பிட்ட பருப்பொருட் அடர்வாக (சரியாக சொன்னால் collapse ஆக ? அவ்வார்த்தையை வூல்ப் பயன்படுத்தவில்லை) நனவுடலையும் வூல்ப் காண்கிறார். (பக். 215-16)
அடுத்த 125க்கும் சற்றே அதிகமான பக்கங்களில் பறக்கும் தட்டுக்களை கண்டவர்களின் உளவியல், ரஷிய
கலைகளில் கனவு வெளிப்படும் விதம், வூல்ப்காங்க் பவுலியின் கனவுகள் மற்றும் அவை குறித்து அவரும் உங்கும் நடத்திய ஆய்வுகள் மற்றும் கடித போக்குவரத்து ஆகியவை விவரிக்கப்படுகின்றன.இந்நூலின் முடிவில் ஆலன் வூல்ப் தன் 'LSD ' அனுபவத்தை விவரிக்கிறார். 'என் கரத்தை பிடித்து கடவுள் ' நீ உண்மையாகவே காண விரும்புகிறாயா ? நீ உண்மையாகவே இம்மாயைக்கு அப்பால் நான் உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறாயா ? ' என கேட்டதைப்போல நான் உணர்ந்தேன். என்னைச் சூழ்ந்த அனைத்தும் பெரும்பொருள் பொதிந்தவை ஆயின. ஒரு மாயா சிருஷ்டி. பொருளற்றவை அல்ல. சாதாரண கணங்களில் இத்தகு உணர்வை வெகு அரிதாகவே நான் பெற்றிருக்கிறேன். என் வாழ்வில் நான் சந்தித்த சிலருடன் இவ்வுணர்வை பெற்றிருக்கிறேன். ஒரு ஆழ்ந்த உணர்வு...கண்மூடித்தனமான நம்பிக்கையல்ல, ஒரு ஆழமான உணர்ச்சி. என் வாழ்வின் வாழ்வதன் அதி உன்னத பொருளே இந்த உணர்வினை பெறுவதுதான்.... என்னால் அவ்வுணர்வை 'நானே இப்பிரபஞ்சமனைத்துமென உள்வாங்க முடிகிறது.இது ஒரு கனவென்றாலும் கூட. ' (பக் 351)
இந்நூல் அறிவியலின் மிகக் கட்டுப்பாடான ஆய்வுகளையும், அறிவியலின் உதாசீனப்படுத்தப்படும் விளிம்புகளில் உள்ள சில துறைகளிலிருந்தும் தரவுகளை தன் கதையாடலில் இணைவிப்பதும், ஆதிவாசிகளின் புராணங்களிலும், பீட்டர்ஸ்பர்கின் வெண்கல குதிரைவீரன் குறித்த பாடலிலும் ( 'பின்தொடரும் நிழலின் குரலில் ' இவ்வெண்கல வீரன் சிலையின் குதிரை குளம்பொலியை கேட்கமுடியும்.), இன்றைய ரஷிய நகர அமைப்பிலும்,கார்க்கியின் வீட்டிலும், பரிணாமத்திலும் துயின்றெழும் கனவுகளை நமக்கு அடையாளம் காட்டி கனவினை நம் இருப்பின், பிரபஞ்ச இருப்பின் ஓர் முக்கிய இயங்கு படிமமாக காட்டுகிறார்.21 பகுதிகள் கொண்ட இந்நூல் நம்மை அழைத்துசெல்லும் பிரயாணம், அது நமக்கு காட்டும் பிரபஞ்ச தரிசனம் நம்மை ஆழப்படுத்துகிறது, இந்நூலின் பல முடிவுகளை ஒருவர் ஏற்காவிட்டாலும் கூட.கனவுகளுக்கும் புராணங்களுக்குமான ஒரு ஒற்றுமையை பல ஆய்வாளர்கள் உணர்ந்துள்ளனர்.புராணங்கள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. அனைத்து சமூகங்களிலும் அவை உருவாகிய வண்ணமே உள்ளன. எத்தகைய மனநிலை, எத்தகைய மனச்செயலாக்கம் புராணங்களை உருவாக்குகிறது ? ஏன் சில புராணக் கருக்கள் உலகெங்கும் காணப்படுகின்றன ? 'புராணம் ஒரு பொதுவான கனவு. கனவு ஒரு தனிமனித புராணம் ', என்பார் காம்பெல். எனில் ஒரு பொதுவான கூட்டுக்கனவு சமுத்திரமதில் ஆங்காங்கே கொப்பளித்தெழுந்து, பெருங்கனவினை தன்னில் பிரதிபலித்து பின் அக்கனவினுள்ளேயே ஒடுங்கும் சிறுகுமிழகளா நம் வாழ்வும், நம் வாழ்வின் அனைத்தும் ?
நூலிலிருந்து சில மேற்கோள்கள்: (ஆலன் வூல்ப் ரஷியாவில் உறையும் கனவுகள் குறித்து)
'மரண-அருகாமை-அனுபவங்கள், இனம் அறியா பறக்கும் வஸ்துகள் போன்றவை வழக்கு கதைகளிலும் அதீத கற்பனையிலும் வெளியாகும் சில அடிப்படை அமைப்புகள் வயப்பட்டவை என நான் கருதுகிறேன். ஒரு கனவுருவாக்கத்தில் ஆழ்ந்த தன்னுணர்விலிருந்து அவை வெளியாவதாக இருக்கலாம்....நம் கனவின் பொருள் எவ்வாறு புறவய உருவாக்கம் அடைகிறது என்பது குறித்து நாம் அறியாதவர்களாக உள்ளோம். ' (பக். 218)
'எஸ்ரா பவுண்ட் கூறுவது போல கலைஞர்களே பரிணாம மாற்றங்களுக்கு முதன்முதலாக தங்களை 'இணைத்துக் ' கொள்ளுகிறார்கள் ..அதீத கற்பனை (Fantasy) ரஷிய கலைகளில் ரஷிய கலைஞர்கள் வரைய ஆரம்பித்த காலம் தொட்டே, கட்டடங்களை வடிவமைத்த காலம் தொட்டே, சிற்பங்களை செதுக்கிய காலம் தொட்டே ஜீவித்து வந்துள்ளது. ஸ்லாவிக் கலையின் தொல் வரலாற்று வேர்களிலிருந்தே,அதன் சடங்கு சிற்பங்களிலும் சரி, விலங்கு ஆவிகளை காட்டும் குகை ஓவியங்களிலும் சரி, உலோக பொருட்களின் மேலுள்ள கலைவேலைப்பாட்டிலும் சரி, ஒருவித கனவின் வெளிப்பாட்டுத்தன்மையை கொண்டுள்ளது. ' (பக்.275)
'தேவதை கதைகளில் நாம் பலவித ரஷிய புராண உருவாக்கங்களை சந்திக்கிறோம். பாதி மானுட பாதி குதிரையான கித்தோவ்ராக்கள் தீப்பறவை (அதே பெயர் கொண்ட ஸ்ட்ராவின்ஸ்கியின் இசை நாடகத்தில் வருவது போல) எனும் மகிழ்வின் குறியீடு, பல்தலை பூத நாகம் கோரின்ச் - தீமைகளின் உறைவிடம், சாவற்ற தீய மந்திரவாதி காஷ்சேய், புகழ்பெற்ற சூனியக்காரி பாபா-யாகா, (தாய்கோவ்ஸ்கியின் 'அன்ன ஏரி 'யால் புகழ் பெற்ற) அழகிய அன்ன இளவரசி என பல. ' (பக் 276)
'வெற்றியின் உருவாக்கங்கள் புனித பீட்டர்ஸ்பர்க் நகரெங்கும் நிறைந்துள்ளன. ஆனால் பயணம் நின்றுவிட வில்லை. ஒவ்வொரு வெற்றியும் அதனுள் ஒரு போலித்தனத்தின் வளையத்தை தன்னில் கொண்டுள்ளது. கலைஞன் எனும் சமுதாயத்தின் ஆதி ஆராதனையாளனிடமிருந்து (Shaman) புதிய ஆடைகளணிந்த இப்பேரரசரின் ஆடையின்மையை காட்டும் முதல் குரல் எழுகிறது. ' (பக் 277)
'தன் சமுதாய -அரசியல் -ஆன்மிக கனவுகளில் மூழ்கிய ஒரு சமுதாயம் அக்கனவுகளுக்கு ஒவ்வாத மற்றொரு கலாச்சார பார்வையை ஒரு புதுப்புலம் அளிக்கையில் எவ்வாறு அதனை பொறுத்துக்கொள்ள முடியும் ?...ஜெர்மனியில் பிறந்த ரஷிய கலைஞர் ப்யோதார் ஷெகெதெல் மாஸ்கோவில் நிகோலாய் ரியாபுஷ்ன்ஸ்கி எனும் ஒரு செல்வந்தருக்காக ஒரு மாளிகையை வடிவமைத்தார். புரட்சியின் பின் ரியாபுஷ்ன்ஸ்கி ஓடிவிட்டார். பின் இவ்வீடு அரசு சொத்தாக்கிக் கொள்ளப்பட்டு அங்கு முதல் உள பகுப்பாய்வு மையம் லியோன் ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நிறுவப்பட்டது. 1920 இல் உள பகுப்பாய்வு சித்தாந்தத்திற்கு ஒவ்வாத விஷயமாகிவிட்டது.அம்மாளிகை மாபெரும் பாட்டாளி வர்க்க கவிஞர் மாக்ஸிம் கார்க்கிக்கு அரசால் அளிக்கப்பட்டது. கார்க்கி என்றைக்கும் அம்மாளிகையை விரும்பியதில்லை. புரட்சியின் பொன்னுலக கனவுகளுக்கும் அம்மாளிகையில் உறையும் இருண்ட நனவிலிக்குமிடையிலான வேறுபாட்டில் அவர் வாழ்ந்தார்- அவரது மர்மமான மரணம் வரையில்....நான் அவ்வீட்டுக்குள் நுழைந்த போது கார்க்கி அம்மாளிகையில் வாழ இஷ்டப்படாததிற்கான காரணத்தை உணர்ந்தேன். அது முரணியக்க பொருள்முதல்வாதத்தின் மாளிகையல்ல, இருண்ட கனவுகளின் மாளிகை. ' (பக். 281-82)
லிபெட்டின் ஆய்வுகளின் தொடர்ச்சியாக நாம் ரோடின் மற்றும் அண்மையில் நடத்தப்பட்ட
டிக் பெயர்மான் ஆகியோரின் ஆய்வுகளை காணலாம். (Conscious and Anomalous Nonconscious Emotional Processes: A Reversal of the Arrow of Time ?, டக்ஸன் 2002) முழு ஆய்வுத்தாளும் இணையத்தில் கிடைக்கின்றன. (Cognet Library)
ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் கனவுக்காலம் குறித்த தொகுப்பு: www.dreamtime.net.au இல் கிட்டுகிறது.
'The Dreaming Universe ', ப்ரெட் ஆலன் வூல்ப், Touchstone Book, 1995, இந்திய விலை (1998 இல்) ரூபாய் 295/- (இக்கட்டுரையில் காணப்படும் படங்கள் நூலில் உள்ளவை அல்ல.)

கனவுகள்
நான் கன்ட கனவுகள்
கனவுகள் எனக்குள் வரத்துவங்கிய நாள் முதலாய் , நான் அதிகம் குளம்பியிருக்கிறேன், அல்லது தெளிவடைந்திருகிறேன்.நான் கன்ட கனவுகள் என்னை என்ன செய்திருக்கின்றன.
தொடரும் ஆய்வுகள்
தொடரும் ஆய்வுகள்
Labels:
dreams,
dreamsreason,
கனவுகள்,
கனவுகள் அதன் பயன்கள்
Subscribe to:
Posts (Atom)